தமிழர்களுக்கும் அரபிகளுக்கும் இடையே நிலவிய கலாச்சார, வணிக உறவுகள் பல நூற்றாண்டுகளை கடந்து பல நிற்கின்றன.1.கி.மு. 178இல் தமிழகம் வந்த அகதார்சைட்ஸ் என்ற கிரேக்கப் பயணி, தென் தமிழகத்தில் Sabea என்று ஓர் ஊர் இருந்ததாகவும், அங்கு அரபிகளுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.2.கஃபு (இறப்பு கி.பி. 645) எனும் கவிஞர், நபிகளை முஹன்னதுன் மின் ஸுயூஃபில்லாஹி மஸ்லூல் என கூறுகின்றார். இதன் பொருள்: இறைவனின் வாட்களிடையே நபிகள் இந்தியா நாட்டு வாள் ஆவார். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரபு நாட்டு குதிரைகள் தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டன. தமிழக வாட்கள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.3. இந்தியாவை அரபி மொழியில் அல் ஹிந்த் என அழைக்கின்றோம். அரபிகள் தங்களின் பெண்குழந்தைகளுக்கு ஹிந்த் என பெயரிடும் முறை இன்றும் நிலவுகிறது.4. தங்கம் நிகர் சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட இலக்கியங்களில் தமிழகத்தோடு அரபிகள் கொண்ட தொடர்பு பதிவுச்செய்யப்பட்டுள்ளது.5. கடலோர தமிழகத்தில் அரபுலக வணிகர்களின் குடியேற்றம் பற்றிய சான்றுகள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.ஏறத்தாழ இருநூறு மில்லியனுக்கும் அதிகமான அரபிகள், அரபி மொழியைத் தங்களின் தாய்மொழியாய்க் கொண்டுள்ளனர்.
Book Details: |
|
ISBN-13: |
978-620-6-79344-1 |
ISBN-10: |
6206793443 |
EAN: |
9786206793441 |
Book language: |
Tamil |
By (author) : |
டாக்டர் க.மு.அ.அஹ்மது ஜுபைர் |
Number of pages: |
96 |
Published on: |
2023-11-07 |
Category: |
General Humanities |