நெடுங்காலமாகவே அரபி இலக்கியம், உலக இலக்கியத்தில் தனது முத்திரையைப் பதித்து வருகிறது. ஆயிரத்து ஓர் இரவுகள், நஜீப் மஹ்ஃபூஸின் நாவல்கள், தர்வீஷின் கவிதைகள், முனீஃப், கஸ்ஸான், ஹைகல், மன்பலூதீ, அதூனீஸ் ஆகியோரின் படைப்பிலக்கியங்கள் உலக இலக்கியங்களாக மதிக்கப்பட்டு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மத, இன எல்லைகளைக் கடந்து இவை அனைவரையும் ஈர்த்தன.அரபி இலக்கியங்கள், அரபிகளின் வாழ்க்கையை, பண்பாட்டை தெளிவாக பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். அம்மக்களின் சிந்தனைகள் இலக்கியங்களாக திகழ்கின்றன. மொழி என்பது தனது மக்களின் கலை, இலக்கியம், சமூகநிலை, எண்ணங்கள் சார்ந்த வாழ்வியல் கூறுகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் விளக்கும் கருவியாகும். உங்கள் கரங்களில் தவழும் இந்த நூலில் மொழியாக்கம் கண்ட சிறுகதைகள், அரபி இலக்கியத் திறனாய்வுக் கட்டுரை முதலியன இடம் பெற்றுள்ளன.ஏறத்தாழ இருநூறு மில்லியனுக்கும் அதிகமான அரபிகள், அரபி மொழியைத் தங்களின் தாய்மொழியாய்க் கொண்டுள்ளனர். அவ்வரபிகள் சவூதி அரேபியா, எகிப்து, குவைத், இராக், அரபு அமீரகம், பஹ்ரைன், யேமன், கத்தார், ஓமன், துனிசீயா, லெபனான், ஜோர்டான், சூடான், சிரியா, பாலஸ்தீனம், லிபியா, அல்ஜீரியா உள்ளிட்ட இருபதுக்கும் மேலான நாடுகளைத் தங்களின் வாழ் விடமாகக் கொண்டுள்ளனர்.
Book Details: |
|
ISBN-13: |
978-620-6-79376-2 |
ISBN-10: |
6206793761 |
EAN: |
9786206793762 |
Book language: |
Tamil |
By (author) : |
டாக்டர் க.மு.அ.அஹ்மது ஜுபைர் |
Number of pages: |
64 |
Published on: |
2023-11-13 |
Category: |
General Humanities |