GlobeEdit ( 13.11.2023 )
€ 39,90
இந்தியத் திருநாட்டின் ஞானம் விளைந்த பூமியாகத் திகழும் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த இலக்கியச் சிற்பிகள் வரிசையில், அரபிக் கவியரசர் சதக்கத்துல்லாஹ் அப்பாவிற்கு தனிச்சிறப்பு உண்டு. தமிழகத்தின் காயல்பட்டிணத்தில் பிறந்து, கீழக்கரையில் வாழ்ந்து அரபி மொழியில் அற்புத ஞானம் வாய்க்கப் பெற்று, அரபு மண்ணில் பிறந்த அறிஞர்களும் கவிஞர்களும் வியந்து போற்றும் வண்ணம் நபிகள் நாயகத் திருமேனி மீது புனைந்து, யாத்தளித்த புகழ்ப்பாக்கள், நமது நாவில் நின்று ஒலிக்கும் நாள் வரை, அவரின் புகழ் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும். பதினோரு கவிதைக் கோவைகளை அரபி மொழியிலே இயற்றி அரபி இலக்கியத்திற்கு வளம் சேர்த்துள்ளார்கள். இக்கவிதைகள் அரபுக் கவிஞர்களே போற்றும் வண்ணம் யாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த அடிகள் பத்தாயிரத்தைத் தாண்டி நிற்கின்றன. .நபிகளாரின் பிறப்பு, வாழ்வு, அற்புதங்கள், அழகிய நடை முறைகள் ஆகியவற்றை இயம்பும் கவிதையிலக்கியத்தை 'மவ்லித்’ இலக்கியம் எனக் கூறுகிறோம். அரேபியாவில் தோன்றிய இம்மவ்லித் இலக்கியத்தை இந்தியாவில் பரப்பிய முதல் அறிஞர் என்ற பெருமை சதக்கத்துல்லாஹ்வையே சாரும். மேலும், இம்மவ்லித் இலக்கியத்திற்காக பல கவிதைக் கோவைகளை யாத்தளித்தும் பங்களிப்புச் செய்துள்ளார்.இஸ்லாத்தின் இறைத்தூதர் மீது தமிழ் அறிஞர்கள் ஏராளமான மவ்லிதுகளை இயற்றியுள்ளனர். நபிகள் நாயகத்தின் மீது 70 நீண்ட மவ்லிதுகள் இயற்றப்பட்டுள்ளன.
A könyv részletei: |
|
ISBN-13: |
978-620-6-79375-5 |
ISBN-10: |
6206793753 |
EAN: |
9786206793755 |
A könyv nyelve: |
Tamil |
Szerezte: |
டாக்டர் க.மு.அ.அஹ்மது ஜுபைர் |
Az oldalak száma: |
72 |
A megjelenés napja: |
13.11.2023 |
Kategória: |
Humán tudományok |